மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் சந்திரபாபு நாயுடு படம் | முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் தளப் பதிவு
இந்தியா

மருந்து நிறுவன வெடிவிபத்து: ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

DIN

ஆந்திரத்தின் அனகாபள்ளியில் மருந்து நிறுவனத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடியும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அச்சுதாபுரம் மருந்து நிறுவத்தில் நேரிட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாகா மருத்துவமனையில் பார்வையிட்டேன்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன். சிகிச்சை பெற்று வருபவர்கள் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடியும், படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சமும், சிறு காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.

வருங்காலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம். விபத்துகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Money Heist இல்ல! ருத்ரா! | Mask திரைப்பட இயக்குநர் விக்ரணன் அசோக்குடன் சிறப்பு நேர்காணல்!

புதிய ஹீரோவுக்கு வழி... சிறகடிக்க ஆசை நடிகரின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மகாராஷ்டிர பாஜக தலைமை பற்றி அமித் ஷாவிடம் முறையீடு! கிடைத்த பதிலால் ஷிண்டே அதிர்ச்சி!!

நெல் கொள்முதல்: நவ. 23, 24ல் தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்? 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT