கோப்புப்படம் 
இந்தியா

பாகிஸ்தான் பகுதியில் விழுந்த இந்திய ‘ட்ரோன்’

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.

Din

ஜம்மு-காஷ்மீரில் பயிற்சிக்காக பறக்கவிடப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் கண்காணிப்பு, பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை கண்டறிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பயிற்சி நோக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.25 மணியளவில் ட்ரோன் பறக்கவிடப்பட்டது. பீம்பா் கலி செக்டாரில் இருந்து பறந்த அந்த ட்ரோன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று விழுந்தது.

அதனை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது அந்நாட்டு ஊடக செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பை தொடா்புகொண்ட இந்திய ராணுவம், அந்த ட்ரோனை திருப்பி அளிக்குமாறு கேட்டுக் கொண்டது என்று தெரிவித்தனா்.

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

ஓவல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

பழம்பெருமைமிகு இந்தியா... ஆயுர்வேதம், யோகா எப்படி வந்தன? | Ancient India

பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டம்: ரயில்வே ஒப்புதல்!

SCROLL FOR NEXT