இந்திய எல்லைப்பகுதி (கோப்புப் படம்) 
இந்தியா

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றவர்கள் கைது!

மேகாலயாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த 4 நபர்கள் உள்பட 6 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

வங்கதேசத்தைச் சேர்ந்த 4 நபர்கள் உள்பட 6 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதிகள் வழியாக இந்திய எல்லைக்குள் 6 நபர்கள் நுழைய முயற்சிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படையினர் அவர்களை ரதச்சேரா பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்களில் 4 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 2 உள்ளூர் வாசிகள் அவர்கள் எல்லையைக் கடக்க உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டப் பலரும் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வர முயற்சிப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வருவதையொட்டிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகரித்துள்ளனர்.

இதில் பல ஊடுருவும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT