அமைச்சர் அதிஷி(கோப்புப்படம்) பிடிஐ
இந்தியா

தில்லி முதியோர்களுக்கு நற்செய்தி சொன்ன அதிஷி!

முதியோர்கள் மீண்டும் ஓய்வூதியம் பெற தொடங்கியுள்ளதாக தில்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

பிடிஐ

தில்லியில் உள்ள முதியோர்கள் மீண்டும் ஓய்வூதியம் பெற தொடங்கியுள்ளதாக தில்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

முதியோர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தில்லி அரசு ரூ.2,200 மற்றும் மத்திய அரசு ரூ.300 வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது பங்களிப்பைச் செலுத்தாததால் கடந்த ஐந்து மாதங்களாக ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது என்று அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

தில்லி முதியோர்களுக்கு நற்செய்தி!

கடந்த 5 மாதங்களாக தில்லியைச் சேர்ந்த ஒரு லட்சம் முதியோர்களின் முதியோர் ஓய்வூதியத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறுத்திவைத்திருந்தது. இதனால், வயது முதியோர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.

பல போராட்டங்களுக்குப் பிறகு முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை கேஜரிவால் அரசு மீண்டும் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட ஓய்வூதியம் முதியோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

60 வயதுக்கு மேற்பட்ட குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் கீழ் 60 முதல் 69 வயதிற்குள்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் எஸ்சி, எஸ்டி, சிறுவான்மை சமூகப் பயனாளிகளுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.500 வழங்கப்படும்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT