நாகர்ஜுனா  
இந்தியா

பட்டாவில் இருந்த அரங்கத்தை இடித்துள்ளார்கள்..! நாகர்ஜுனா ஆவேஷம்!

பிரபல நடிகர் நாகர்ஜுனா தனது அரங்கம் இடிக்கப்பட்டது குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

DIN

பிரபல நடிகர் நாகர்ஜுனா தனது கட்டம் இடிக்கப்பட்டது குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் நாகர்ஜுனா. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக இருக்கும் நாக சைதன்யா இவரது மகன்தான்.

ஹைதராபாத்தில் உள்ள இவருக்கு சொந்தமான அரங்கினை ஹைதராபாத்தின் தேசிய பேரிடர் கண்காணிப்பு குழு இடித்துள்ளது.

பொதுமக்களுக்கு சொந்தமான நீர் நிலைகளை ஆக்கரமித்து இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டதாக பேரிடர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இந்த அரங்கம் 10 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாகவும் பொதுச் சொத்தில் சுமார் 1.2 ஏக்கர் ஆக்கரமித்து நாகர்ஜுனா அரங்கை அமைத்துள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் நாகர்ஜூன கூறியதாவது:

எனது என் கருத்தரங்கு கூடத்தை சட்டத்துக்கு புறம்பான நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ள நிலையில் இடித்துள்ளார்கள். நாங்கள் சட்டத்தை எந்த வகையிலும் மீறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த இடம் பட்டாவில் இருக்கிறது. ஒரு ’இன்ச்’கூட ஆக்கரமித்து கட்டப்படவில்லை. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் எந்தவித அறிவிப்புமின்றி அரங்கை இடிக்கக் கூடாதென நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டுள்ளது.

தவறான தகவலால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை. சட்டத்தை மதிக்கும் நபராக இருக்கும் நான் நீதிமன்றத்தில் என் மீது தவறென தீர்ப்பு வழங்கப்பட்டால் நானே அதை இடித்துவிடுவேன்.

அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு சரியான நிவாரணம் வேண்டி நீதிமன்றத்திடம் முறையிடவிருக்கிறோம் என்றார்.

நாகர்ஜுனா தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான நாகர்ஜுனாவின் நா சாமி ரங்கா கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT