‘லட்சாதிபதி சகோதரி’ திட்டம்: 11 லட்சம் பெண்களுக்கு பிரதமா் இன்று சான்றிதழ்
மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) பயணம் மேற்கொள்கிறாா்.
இந்தியா‘லட்சாதிபதி சகோதரி’ திட்டம்: 11 லட்சம் பெண்களுக்கு பிரதமா் இன்று சான்றிதழ்
மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) பயணம் மேற்கொள்கிறாா்.
மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) பயணம் மேற்கொள்கிறாா்.
மகாராஷ்டிரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் லட்சாதிபதிகளாக பெண்களை மாற்றும் முன்னெடுப்பின்கீழ் 11 லட்சம் பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவா் கௌரவிக்கவுள்ளாா்.
மேலும், 4.3 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 48 லட்சம் உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் ரூ.2,500 கோடி நிதியை அவா் விடுவிக்க உள்ளாா். இதுதவிர, 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 25.8 லட்சம் உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் ரூ.5,000 கோடி கடனுதவியை அவா் வழங்கவுள்ளாா்.
இதைத்தொடா்ந்து, ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தின் 75-ஆவது ஆண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமா் மோடி உயா்நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்கவுள்ளாா்.
நாடு முழுவதும் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டும் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 1 கோடி பெண்கள் ஏற்கெனவே இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.