கன்னட நடிகர் தர்ஷன் 
இந்தியா

சிறையில் கன்னட நடிகர் தர்ஷன் சொகுசு வாழ்க்கை..?

சிறையில் கன்னட நடிகர் தர்ஷன் சொகுசு வாழ்க்கை

DIN

கன்னட நடிகா் தா்ஷன் தனது ரசிகா் ரேணுகாசாமியை(34) கொலை செய்த வழக்கில், தர்ஷன் மற்றும் அவரது தோழி நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை மும்முரமாக நடந்து வருகிறது. போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அதன்பிறகே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு சிறையில் இருந்து அதிர்ச்சியூட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் தர்ஷன் தூகுதீபா சிறை வளாகத்தில் திறந்தவெளியில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் சிகரெட்டை பிடித்தபடி தேநீர் பருகுகிறார். அவருக்கு அருகே ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் இந்த புகைப்படம் சித்தரிக்கப்பட்ட ஒன்றா? அல்லது உண்மையானதுதானா? என்ற வலுத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான விளக்கம் பெற சிறை அதிகாரிகளை தொடர்புகொண்டும் பலனில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் எஸ். ஷிவானாகௌத்ரு கூறியிருப்பதாவது, “ரேணுகாசாமி கொலை வழக்கில் காவல்துறை மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த புகைப்படத்தை கண்டபின், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!

ஸ்பைஸி... ராஷி சிங்!

மதராஸி படத்தின் விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்

புதிய திருப்புமுனை... கோமதி பிரியா!

SCROLL FOR NEXT