ஏ.ஜி. நூரனி  படம்: ANI
இந்தியா

ஏ.ஜி. நூரனி காலமானார்!

மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று (ஆகஸ்ட் 29) காலமானார்.

DIN

மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று (ஆகஸ்ட் 29) காலமானார்.

இந்தியாவின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட அரசியல் வல்லுநர், சிறந்த வழக்குரைஞர் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக வலம் வந்தவர் அப்துல் கஃபூர் நூரனி. நண்பர்களால் நூரனி அல்லது கஃபூர் பாய் என அறியப்பட்டவர்.

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், அந்த புத்தக வேலைகள் முடிவடையும் முன்னரே உயிரிழந்துள்ளார்.

நடமாடும் அறிவுக்களஞ்சியம் எனவும் ஏ.ஜி. நூரனியை பலரும் புகழ்வது வழக்கம். பல்வேறு தலைப்பின் கீழ் நூரனி புத்தகங்களை எழுதியுள்ளார். காஷ்மீர் விவகாரம், இந்தியா - சீனா விவகாரம், ஹைதராபாத், அடிப்படை உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்களை எழுதியுள்ளார்.

மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான ஏ.ஜி.நூரனியின் இழப்பு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பன்முகத் திறன் கொண்டவரான ஏ.ஜி. நூரனியின் வயது 94.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி வரி முறைகேடு: மேலும் 2 போ் கைது

புத்தகம் வாசிப்பை வாழ்நாள் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

பாஜக-ஆா்எஸ்எஸ் நிதீஷ் குமாரை குப்பையில் வீசும்: காா்கே

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT