கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் 
இந்தியா

கொல்கத்தா சம்பவம்: தினமும் ரொட்டியா? முட்டை நூடுல்ஸ் கேட்கும் குற்றவாளி சஞ்சய் ராய்

கொல்கத்தா சம்பவத்தில், தினமும் ரொட்டி சாப்பிட பிடிக்காமல், முட்டை நூடுல்ஸ் கேட்பதாக குற்றவாளி சஞ்சய் ராய் மீது புகார்

DIN

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சய் ராய், தனக்கு தினமும் ரொட்டி சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறி, முட்டை நூடுல்ஸ் கேட்டு சிறைத் துறை அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் ரொட்டி மற்றும் அதற்கு பதார்த்தம் மட்டும் சிறையில் தினமும் வழங்கப்படுவதாகவும், அது தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி, முட்டை நூடுல்ஸ் வாங்கித்தரும்படி தொல்லை கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறைத்துறையினர் கூறுகையில், சஞ்சய் ராய்க்கு ரொட்டியும் காய்கறியும் கொடுக்கும்போதெல்லாம் அவருக்கு கடுமையான கோபம் ஏற்படுகிறது. பிறகு சிறை அதிகாரிகள் கண்டித்த பிறகே அவர் அதனை சாப்பிட ஒப்புக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணைக் காவலில் இருந்து சீர்திருத்த இல்லத்துக்கு அழைத்து வந்த போது, தன்னை தூங்க விடுமாறு அவர் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், அவர் அவ்வப்போது முணுமுணுத்துக்கொண்டே இருந்ததாகவும், ஒரு சில நாள்களில் அவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறையின் தன்னார்வலராக செயல்பட்ட சஞ்சய் ராய் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இதில், மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுவரை 140 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT