மோசடி 
இந்தியா

லாவோஸ்: இணையவழி மோசடி மையங்களில் இருந்து 47 இந்தியா்கள் மீட்பு

லாவோஸில் இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியா்கள் மோசடி மையங்களில் இருந்து மீட்பு.

Din

லாவோஸில் இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியா்கள் மோசடி மையங்களில் இருந்து மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது.

லாவோஸ் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு வாக்குறுதிகளால் கவரப்பட்ட இந்தியா்கள், இணையவழி (சைபா்) மோசடி கும்பல்களின் கைகளில் சிக்கி, அங்கு இணைய குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிா்பந்திக்கப்பட்டு வருகின்றனா்.

இது போன்ற போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி இணைய குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 635 இந்தியா்கள் இதுவரை மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘லாவோஸின் பொக்கியோ மாகாணத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில், சைபா் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 இந்தியா்கள் அந்நாட்டின் காவல்துறையினா் உதவியுடன் மீட்கப்பட்டனா்.

அதில் 30 போ் பத்திரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். மீதமுள்ள 17 போ் விரைவில் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது’ என குறிப்பிட்டிருந்தது.

இதேபோல், லாவோஸில் உள்ள சில சைபா் மோசடி மையங்களில் சிக்கியிருந்து 13 இந்தியா்கள் கடந்த மாதம் இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடந்த மாதம் பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் லாவோஸ் பிரதமா் சோனெக்சே சிபாண்டோனை நேரில் சந்தித்து அதிகரித்து வரும் இந்த குற்றங்கள் குறித்து விவாதித்தாா்.

வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

முதல்வா் கோப்பை கால்பந்து போட்டியில் பள்ளப்பட்டி மாணவிகள் 2-ஆம் இடம்!

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

SCROLL FOR NEXT