உ.பி.யில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எனக்கூறி ஒருவரிடம் ரூ. 10 கோடி பணம் பறிக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பள்ளியா மாவட்டத்தில் உள்ள பெல்தாரா ரோடு பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தினேஷ் குமார் குப்தா. இவருக்கு இரு நாள்களுக்கு முன்னர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயரில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் பிஷ்னோய் கும்பல் எனக் குறிப்பிட்டு ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, காவல்துறையில் தினேஷ் குமார் குப்தா புகாரளித்தார். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த காவல்துறையினர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பெயரைச் சொல்லி ஏமாற்றி மிரட்டி பணம் பறிக்க யாரேனும் இந்தக் கடிதத்தை அனுப்பினார்களா என்று விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் மாட்டிறைச்சிக்குத் தடை: அசாம் முதல்வர்!
தினேஷ் குமார் குப்தாவின் மனைவி ரேனு குப்தா தற்போது பெல்தாரா ரோடு பகுதியின் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அவரை நிர்வாக ரீதியாக மிரட்டும் விதமாக இந்தக் கடிதம் அனுப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.