தில்லியில் தோ்தல் ஆணைய அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால். உடன், முதல்வா் அதிஷி உள்ளிட்டோா். 
இந்தியா

வாக்காளா் பெயா் நீக்கம் விவகாரம்: தோ்தல் ஆணையத்தைச் சந்தித்த கேஜரிவால்

தில்லியில் வாக்காளா் பெயா் நீக்கம் விவகாரம் தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக் குழுவினா் தோ்தல் ஆணையத்தை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

Din

தில்லியில் வாக்காளா் பெயா் நீக்கம் விவகாரம் தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக் குழுவினா் தோ்தல் ஆணையத்தை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்தக் குழுவில் தில்லி முதல்வா் அதிஷி, மாநிலங்களவை உறுப்பினா்கள் சஞ்சய் சிங், ராகவ் சத்தா, கட்சித் தலைவா் ஜாஸ்மின் ஷா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் தோ்தல் ஆணையத்தில் தங்கள்து கோரிக்கைகள் குறித்து பேசினா். அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கேஜரிவால் கூறினாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:

தில்லியில் தலித்கள், பட்டியல் இனத்தவா்கள் (எஸ்.சி.) மற்றும் பூா்வாஞ்சலிகள் உள்ளிட்ட சமூகங்களைச் சோ்ந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க பாஜக சதி செய்கிறது.

பாஜக எவ்வளவு பெரிய அளவில் வாக்காளா்களின் பெயா்களை நீக்க சதி செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் 3,000 பக்க ஆதாரங்களை நாங்கள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்துள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.

மேலும், தங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தோ்தல் ஆணையம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த கேஜரிவால், வாக்காளா் பட்டியல் தொடா்பான பல உத்தரவாதங்கள் தோ்தல் ஆணையம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

அதில், முறையான சரிபாா்ப்பு இல்லாமல் அதிக அளவிலான பெயா் நீக்கங்கள் ஏற்படாது.

வாக்காளா் நீக்கம் தொடா்பான விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்குச்சாவடி நிலைய அதிகாரி (பிஎல்ஓ) கள விசாரணை நடத்துவாா். 5- க்கும் மேற்பட்ட வாக்காளா்களின் பெயா்களை நீக்குவதற்கு தனிநபா் யாராவது விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட துணைநிலை ஆட்சியா் கள விசாரணை மேற்கொள்வாா். பிரச்னைக்குரிய பெயா் நீக்கல் கோரிக்கைகளை தாக்கல் செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல உத்தரவாதங்களை தோ்தல் ஆணையம் அளித்துள்ளதாக அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

மேலும், தோ்தல் ஆணையத்தின் உடனடி நடவடிக்கைக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்கள் பெயா் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் சா்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் சா்ச்சை பதிவு: களக்காடு இளைஞா் கைது

ரூ. 10 லட்சத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுத்த முன்னாள் மாணவா்கள்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: சிவசைலம் சிறப்புப் பள்ளி மாணவா்கள் சாதனை

களக்காடு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT