இந்தியா

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் மூத்த வழக்குரைஞர் விலகல்!

சூழ்நிலை காரணமாக விலகியதாகத் தகவல்

DIN

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் இருந்து மூத்த வழக்குரைஞர் பிருந்தா குரோவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் காவல்துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

வழக்கறிஞர்கள் சௌதிக் பானர்ஜி மற்றும் அர்ஜுன் கூப்டு அடங்கிய சட்டக் குழு, செப்டம்பர் முதல் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இலவச பிரதிநிதித்துவத்தை வழங்கி வருகின்றனர். இந்த காலகட்டத்தில், 43 அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள சாட்சியங்கள் அடுத்த 3 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞராக இருந்த பிருந்தா குரோவர் இந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார். சில தலையீட்டு காரணிகள், சூழ்நிலைகள் காரணமாக, வழக்குரைஞர் பிருந்தா குரோவர் சட்டக் குழு இந்த விஷயத்தில் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், இனி பாதிக்கப்பட்ட குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT