கோப்புப் படம் 
இந்தியா

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

ஐடி துறை தவிர மற்ற துறைகள் அனைத்தும் 2% வரை சரிவு, மத்திய தர நிறுவனங்கள் 0.5% வரையிலும், சிறு, குறு நிறுவனங்கள் 1% வரையிலும் சரிந்தன.

DIN

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 12) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 236 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 2600 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

பங்குச் சந்தையில் ஐடி துறை தவிர மற்ற துறைகள் அனைத்தும் 2% வரை சரிவைக் கண்டன. நிகர்வு பொருள்கள் துறை 1% சரிவுடன் முடிந்தது. மத்திய தர நிறுவனங்கள் 0.5% வரையிலும், சிறு, குறு நிறுவனங்கள் 1% வரையிலும் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 236.18 புள்ளிகள் சரிந்து 81,289.96 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.29 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93.10 புள்ளிகள் சரிந்து 24,548.70 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.38சதவீதம் சரிவாகும்.

12 நிறுவனப் பங்குகள் ஏற்றம்

இன்று காலை வணிக நேரத் தொடக்கத்தில் உயர்வுடன் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக

81,680.97 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் தொடர்ந்து சரிந்துவந்ததால் அதிகபட்சமாக

81,211.64 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 236 புள்ளிகள் சரிந்து 81,289 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்திருந்தன. எஞ்சிய 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 1.55% வரை சரிந்தன. இதற்கு அடுத்தபடியாக டெக் மஹிந்திரா 1.53%, இந்தஸ் இந்த் வங்கி 1.34%, அதானி போர்ட்ஸ் 0.83%, இன்ஃபோசிஸ் 0.66%, டிசிஎஸ் 0.63%, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் 0.56%, பவர் கிர்ட் 0.51%, எச்.சி.எல். டெக் 0.28% உயர்ந்துள்ளன.

இதேபோன்று என்.டி.பி.சி. பங்குகள் -2.71% வரை சரிந்தன. இதற்கு அடுத்தபடியாக ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் -2.35%, டாடா மோட்டார்ஸ் -1.60%, எல்&டி -1.46%, கோட்டாக் வங்கி -1.45%, ரிலையன்ஸ் -1.20%, ஏசியன் பெயின்ட்ஸ் -1.15% சரிந்திருந்தன.

நிஃப்டி நிலவரம்

வணிக நேரத் தொடக்கத்தில் 24,604.45 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி படிப்படியாக சரிந்து

24,527 புள்ளிகள் வரை சரிந்தது. அதிகபட்சமாக 24,675 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. எனினும் வணிக நேர முடிவில் 93 புள்ளிகள் சரிந்து 24,548 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் அதானி என்டர்பிரைசஸ் 1.91%, பார்தி ஏர்டெல் 1.55%, டெக் மஹிந்திரா 1.53%, இந்தஸ் இந்த் வங்கி 1.34%, அதானி போர்ட்ஸ் 0.83%,, டாக்டர் ரெட்டி 0.56%, பஜாஜ் ஃபைனான்ஸ் 0.16%, அதானி கிரீன், டாடா டெலி சர்வீசஸ், செஞ்சிரி பிளே, அதானி பவர் உள்ளிட்ட துறைகள் உயர்வுடன் காணப்பட்டன.

நால்கோ, ஜூப்லியண்ட், கோ டிஜிட், இந்தஸ் டவர் உள்ளிட்டவை கடுமையாக சரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT