சபரிமலை (கோப்புப் படம்) 
இந்தியா

29 நாள்களில் ரூ.163 கோடி: சபரிமலை கோவில் வருமானம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் குறித்து...

DIN

சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டு 29 நாள்களில் இதுவரை ரூ. 163.89 கோடி வருமானம் பெறப்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் சன்னிதானம் சில வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த நிலையில், 29 நாள்களில் இதுவரை 22.67 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4,51,043 பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை ரூ. 163.89 கோடி வருமானம் பெறப்பட்டதாகவும், இதில், அரவணைப் பிரசாதத்தின் விற்பனை மட்டும் ரூ. 82.67 கோடியைத் தொட்டுள்ளது.

உண்டியல் காணிக்கை ரூ. 52.27 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 22.76 கோடி அதிகமாகும். அரவணைப் பிரசாதமும் கடந்த ஆண்டை விட ரூ. 17.40 கோடி அதிகமாக விற்றுள்ளது.

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து டிச. 22 அன்று காலை 6 மணிக்குப் புறப்பட்டு டிச. 25 அன்று மாலை 5 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும்.

தீபாராதனை நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்றும், கற்பூர ஆரத்தி எடுக்கும் நிகழ்வு டிச. 23, 24 அன்று நடைபெறும் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... ஆஷ்னா ஜவேரி!

பால் நிலா... ஹர்லின் தியோல்!

உலக அரங்கில் இந்திய சினிமா... ரன்வீர் சிங் பேச்சு!

தமிழ்நாட்டில் இதுவரை 6.07 கோடி படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

”RSS சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியே SIR-ஐ எதிர்த்து போராடும் Vijay" - Appavu

SCROLL FOR NEXT