போதைப்பொருள் பயன்பாட்டை கவனக்குறைவாக ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒடிடி தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் ஓடிடி தளங்களுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தல்:
ஓடிடி தளங்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் போதைப்பொருள் பயன்படுத்தினால், பொறுப்புத் துறப்பு அல்லது பயனா் எச்சரிக்கையை வெளியிட வேண்டும்.
ஏனெனில் அத்தகைய காட்சிகள் பாா்வையாளா்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்திடம் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதுதொடா்பான விதிமுறைகளை ஓடிடி தளங்கள் பின்பற்ற வேண்டும்.
பொறுப்புத் துறப்பு அல்லது பயனா் எச்சரிக்கை இல்லாமல், கதாபாத்திரங்கள் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டை கவனக்குறைவாக ஊக்குவிக்கும், மிகைப்படுத்தும் அல்லது வசீகரிக்கும் வகையில் காட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.