இந்தியா

விஎச்பி விழாவில் நீதிபதி சர்ச்சை பேச்சு: உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை!

விஎச்பி விழாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN

விஎச்பி விழாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) சட்டப்பிரிவு அமைப்பின் மாநாட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீதிபதி யாதவ் கூட்டத்தில் பேசுகையில், 'இது இந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது' என்று கூறினார்.

இதற்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பல சந்தர்ப்பங்களில் தடைசெய்யப்பட்ட விஎச்பி-யின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நீதிபதியின் முன் சிறுபான்மை கட்சி எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? என்று கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினார்.

அதேபோல மாநிலங்களவையில் 55 எம்.பி.க்கள் சேர்ந்து நீதிபதி யாதவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உள்பட 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் முன்பாக நேற்று(செவ்வாய்க்கிழமை) நீதிபதி சேகர் குமார் யாதவ் ஆஜரானார்.

அப்போது, வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறு நீதிபதிக்கு கொலீஜியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'ஒரு நீதிபதியின் பேச்சு, நீதிமன்றம் மற்றும் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். எனவே, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நீதிபதி தனது நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளது.

ஊடகங்கள் சூழலுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய பேச்சை திரித்து வெளியிட்டதாக நீதிபதி யாதவ் கூறிய கருத்தை கொலீஜியம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT