விஜய் மல்லையா (கோப்புப் படம்) 
இந்தியா

விஜய் மல்லையா சொத்துகளை விற்றதில் ரூ. 14,000 கோடி மீட்பு!

விஜய் மல்லையா சொத்துகளை விற்றதில் ரூ. 14,000 கோடி வங்கிகளுக்கு கிடைத்ததாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

DIN

தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்றதில் வங்கிகளுக்கு ரூ. 14,000 கோடி கிடைத்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை பேசினார்.

அப்போது அமலாக்கத்துறை துறை பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மொத்தமாக ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில், அதிகபட்சமாக நாட்டைவிட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.14,131.16 கோடி மதிப்பிலான சொத்துகள் அடங்கும் என்றார்.

மேலும், நீரவ் மோடி வழக்கில் ரூ.1,052.58 கோடி, மெஹுஸ் சோக்ஸி வழக்கில் ரூ.2,565.90 கோடி மதிப்பிலான சொத்துகளையும் அமலாகத்துறை மீட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.

இதனிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒருவா் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அவரின் சொத்துகளை அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்ய முடியும்.

இதனடிப்படையில், 2019-ஆம் ஆண்டு விஜய் மல்லையாவை ‘தப்பியோடியவா்’ என்று அறிவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்ததை தொடர்ந்து, இந்தியாவில் இருந்த அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நிர்மலா சீதாராமன் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

SCROLL FOR NEXT