பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி கோப்புப் படம்
இந்தியா

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

DIN

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இதில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பேசியது மிகவும் மகிழ்ச்சிகரமானது. இதில் இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவு, அதனை பேணி பராமரிக்கும் அர்ப்பணிப்பு ஆகியவை மேலும் வலுப்படுத்தப்பட்டது. அத்துடன் காமன்வெல்த், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்தும் கருத்துகளை இருவரும் பரிமாறிக்கொண்டோம் என மோடி பதிவிட்டுள்ளார்.

நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பணியாற்ற உறுதி எடுத்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT