வெள்ளிக்கட்டிகள் 
இந்தியா

முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் 40 கிலோ வெள்ளி, ரூ.2.85 கோடி ரொக்கம் பறிமுதல்!

மத்திய பிரதேசத்தில் முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் 40 கிலோ வெள்ளி, ரூ.2.85 கோடி ரொக்கம் பறிமுதல்!

DIN

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போக்குவரத்துத் துறை முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் லோக் ஆயுக்தா காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2.85 கோடி ரொக்கம், 40 கிலோ வெள்ளிக் கட்டிகள், 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இந்த அளவுக்கு பணம், வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதுவும் தலைமைக் காவலர் வீட்டில் ரூ.3 கோடி அளவுக்கு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவைகள் அல்லாமல், தலைமைக் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு இன்னமும் கண்டறியப்படவில்லை.

அது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை சதமடித்து எங்கேயோ சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஏழைகளுக்கு இனி கால் கொலுசுக்கும் வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கம் நிலையில் குவியல் குவியலாக வெள்ளிக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் விடியோக்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

சந்தேகம் வந்தது எப்படி?

போக்குவரத்துத் துறையில் தலைமைக் காவலராக இருந்த நபர், கடந்த ஆண்டு பணியை ராஜிநாமா செய்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக அவர் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வருவாய்க்கும் சொத்துக்கும்

அவர் பெற்ற வருவாய்க்கும் சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மத்திய பிரதேச அரசு ஊழியர்களின் பொருளாதார நிலையை தொடர்ந்து அரசு கண்காணித்து வரும் நிலையில், இந்த விவரம் வெளியே வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினியின் முதல் திரைப்படம் - 50வது ஆண்டு கூலி வரை வெளியிடும் ஒரே திரையரங்கம்!

விஜய் டிவியில் ஆக. 11 முதல் புதிய நேரத்தில் தொடர்கள்!

மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய வாகனஓட்டிகள்! | Uttarakhand

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

மராத்திய இளவரசி... ரிங்கு ராஜ்குரு!

SCROLL FOR NEXT