அரவிந்த் கேஜரிவால்  
இந்தியா

தலித் மாணாக்கர் வெளிநாட்டில் கல்விகற்க அம்பேத்கர் பெயரில் உதவித்தொகை: கேஜரிவால்

டாக்டர் அம்பேத்கர் சம்மான் உதவித்தொகை என்பது அம்பேத்கரை பாஜக அவமதித்ததற்குப் பதில்..

DIN

தில்லியில் தலித் மாணவர்களுக்கு இலவச வெளிநாட்டுக் கல்விக்கான அம்பேத்கர் உதவித்தொகையை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைமையகத்தில் கேஜரிவால் கூறியதாவது,

டாக்டர் அம்பேத்கர் சம்மான் உதவித்தொகை என்பது அம்பேத்கரை பாஜக அவமதித்ததற்குப் பதில்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை அவமதித்து கேலி செய்தார். இதனால் அம்பேத்கரை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.

கல்விதான் முன்னோக்கிச் செல்லும் வழி என்று அம்பேத்கர் கூறியுள்ளார். அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக அமெரிக்காவில் சென்று பிஎச்டி பட்டம் பெற்றவர் அம்பேத்கர். எனவே, இந்த உதவித்தொகையானது இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பிக்கு பாஜக இழைத்த அவமானத்திற்குப் பதில் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம், தில்லியைச் சேர்ந்த தலித் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க முடியும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி கிடைத்தால், அவர்களின் கல்வி, பயணம் மற்றும் தங்குமிடத்திற்கான முழு செலவையும் தில்லி அரசே ஏற்கும்.

அரசு ஊழியர்களின் குழந்தைகளும் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள், எப்படி, எப்போது உதவித்தொகை வழங்கப்படும் என்பதை விவரிக்காமல் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர், தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் ரூ.2,100 மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை

பத்திரிகையாளர் சந்திப்பில் டீசல் படக்குழுவினர் - புகைப்படங்கள்

உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000 என்கவுன்ட்டர்கள்! 256 குற்றவாளிகள் பலி!

ஏடிஎம் காா்டு மூலம் நூதன மோசடி: இருவா் கைது

புல்லுவன் பாட்டு... கேரள அரசின் விருதுவென்ற ரிமா கல்லிங்கல் படம்!

SCROLL FOR NEXT