நடிகர் அல்லு அர்ஜுன்(கோப்புப்படம்) 
இந்தியா

எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்: நடிகர் அல்லு அர்ஜுன்

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

DIN

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் சனிக்கிழமை தெரிவித்திருந்தார். அல்லு அர்ஜுன் மட்டும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு சென்றிருந்தால் எந்த பிரச்னையும் இருந்திருக்காது.

ஆனால் அவர் ரோட் ஷோ நடத்தினார். இதனால், அருகிலுள்ள அனைத்து தியேட்டர்களில் இருந்தும் மக்கள் சந்தியா தியேட்டர் நோக்கி வந்தனர். அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார் என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

தற்போது முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. எனது ரசிகர்களுடன் சந்தியா திரையரங்கில் பல வருடங்களாக திரைப்படம் பார்த்து வருகிறேன். சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து நெரிசல் துயரம் குறித்து எனக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறை அனுமதி மறுத்தும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: தெலங்கானா முதல்வர்

அந்த சோகம் தெரிந்தால் எப்படி தியேட்டரில் படத்தை பார்த்து ரசிக்க முடியும்?. எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நெரிசல் துயரம் குறித்து வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன், பாதிக்கப்பட்ட ஸ்ரீதேஜின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஒவ்வொரு மணி நேரமும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரைப் புரட்டிப்போடும் பேரிடர்! 10 பேர் பலி?

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சென்றார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT