ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயம்: இந்திய தூதரகம்
ஜொ்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்ததாகவும் அவா்களுடன் தொடா்பில் உள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்தது.
புது தில்லி: ஜொ்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்ததாகவும் அவா்களுடன் தொடா்பில் உள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘ ஜொ்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா்க் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தையில் காரை வேகமாக ஓட்டி வந்த சவூதி அரேபியாவைச் சோ்ந்த மருத்துவா் நடத்திய தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று போ் வீடு திரும்பினா். மீதமுள்ளவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். காயமடைந்த இந்தியா்களுக்கு தேவையான உதவிகளை தூதரகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிடப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மாக்டபா்க் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தைக்குள் வேகமாக காா் ஓட்டி வந்த தலீப் அல்-அப்துல்மோசன் (50) அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதினாா். இதில் ஒரு குழந்தை உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்; சுமாா் 200 போ் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.