சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் அடிதடி! 
இந்தியா

அம்பேத்கர் விவகாரம்: அடித்துக் கொண்ட காங்கிரஸ் - பாஜக கவுன்சிலர்கள்!!

சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடித்துக் கொண்டது தொடர்பாக...

DIN

சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் அம்பேத்கர் விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இணைந்து அமித் ஷாவுக்கு எதிராக தீர்மானத்தை இன்றைய கூட்டத்தில் கொண்டு வந்தனர்.

நேரு காலத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் செயலில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டதாக பாஜக கவுன்சிலர்கள் விமர்சித்துப் பேசினார்.

இதனிடையே, நேஷனல் ஹெரால்டு வழக்கை மேற்கோள் காட்டி, ராகுல் காந்தி ஜாமீனில் வெளியே இருப்பதாக, நியமன கவுன்சிலர் அனில் மாசி தெரிவித்ததை தொடர்ந்து இரு கட்சிகளின் கவுன்சிலர்களும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.

இதனால், சண்டீகர் மாநகராட்சிக் கூட்ட அரங்கு பதற்றத்துடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT