கோப்புப் படம் 
இந்தியா

செல்போன் ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றம்! அதிக கட்டணம் தேவையில்லை!

அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கும் தனியாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்; இணையத்துக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவையில்லை

DIN

செல்போன் ரீசார்ஜ் கட்டண விதிகளில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கும் தனியாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்; இணையத்துக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவையில்லை என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

செல்போனில் இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்கு இத்திருத்தம் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களில், 90 நாட்களுக்கான வரம்பை நீக்கி, அதை 365 நாட்கள் வரை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நீட்டித்துள்ளது.

இந்தத் திருத்தங்கள், கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், நாட்டிலுள்ள 15 கோடி 2-ஜி பயனாளர்களுக்கும், இரட்டை சிம் கார்டுகள் பயன்படுத்துவோருக்கும் பயனுள்ளதாக அமையும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பயனர்கள், தாங்கள் பயன்படுத்தும் சேவைக்கு மட்டும் கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

தற்போதைய நடைமுறை

தற்போது அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையம் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து ரீசார்ஜ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இணையத்துக்கு மட்டும் தனிக் கட்டணம் உள்ளது. ஆனால், குறுஞ்செய்திக்கோ, முடிவில்லா அழைப்புக்கோ தனியாக ரீசார்ஜ் செய்யும் அம்சம் இல்லை.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது கொண்டுவந்துள்ள திருத்தங்களின்படி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி வசதிகளை மட்டும் பயன்படுத்தும் வகையில் தனி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இணையத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இணையப் பயன்பாடு தற்போது அதிகரித்துவரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்புவரை அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு தனித்தனியாக ரீசார்ஜ் செய்யும் அம்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு திருட்டைக் கண்டித்து செப். 6, 13-ல் தொடா் முழக்கப் போராட்டம்

பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி!

SCROLL FOR NEXT