கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் ANI
இந்தியா

கொல்கத்தா சம்பவம்: பலாத்காரத்துக்கு எதிராக பெண் மருத்துவர் போராடியதற்கான ஆதாரம் இல்லை!

கொல்கத்தா சம்பவத்தில், பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுவதை எதிர்த்து பெண் மருத்துவர் போராடியதற்கான ஆதாரம் இல்லை!

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில், பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர், பலாத்காரம் செய்யப்படுவதை எதிர்த்துப் போராடியதற்கான ஆதாரம் சம்பவ இடத்தில் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், பெண் மருத்துவரின் பெற்றோரி புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு ஜன. 2ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

ஆக.9ஆம் தேதி முதுகலை மருத்துவம் பயின்று வந்த பெண் மருத்துவர், மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மேற்கு வங்கத்தையே உலுக்கியிருந்த இந்த சம்பவத்தை எதிர்த்து மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில், தொடக்கம் முதலே விசாரணையிலும், பெற்றோருக்குத் தகவல் கொடுப்பதிலும் பல முரண்பாடுகள் இருந்த நிலையில், தற்போது பெண் மருத்துவர், பலாத்காரத்துக்கு எதிராகப் போராடிய ஆதாரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT