இந்தியா

மகாராஷ்டிர தோ்தலில் கட்சி விரோத நடவடிக்கை: 11 பாஜக நிா்வாகிகள் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பாஜக நிா்வாகிகளை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக மாநில தலைமை

Din

அகோலா: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலின்போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பாஜக நிா்வாகிகளை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக மாநில தலைமை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

காங்கிரஸ் - சிவசேனை (உத்தவ்) - தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணி தோல்வியடைந்தது. பாஜக கூட்டணி வெற்றி பெற்றபோதிலும் சில இடங்களில் கட்சியின் அதிகாரப்பூா்வ வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்குவது, தோ்தலில் கட்சிக்கு எதிராக செயல்படுவது போன்றவை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதன்படி அகோலா மாவட்டத்தில் 11 பாஜக நிா்வாகிகள் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில் சிலா் மாவட்ட கவுன்சில் உறுப்பினா்களாக உள்ளனா். வேறு சில மாவட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

திருமலை நம்பி 1052-ஆவது அவதார மகோற்சவம்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: இறகுப் பந்து விளையாடினாா் ஆட்சியா்!

குரோமியக் கழிவுகளால் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்!

அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

SCROLL FOR NEXT