இந்தியா

மேற்கு வங்கத்தில் கூலித் தொழிலாளர்களை சந்தித்த ராகுல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்கம், முர்ஷிதாபாத்தில் கூலித் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். 

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்கம், முர்ஷிதாபாத்தில் கூலித் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தை ராகுல் மேற்கொண்டு வருகிறார். பிகாரில் நடைப்பயணத்தை மேற்கொண்ட ராகுல் நேற்று மேற்குவங்க அடைந்ததும், அவர் சென்ற காரின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொருங்கியது. 

இதையடுத்து, இன்று மேற்கு வங்கம், முர்ஷிதாபாத்தில் ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் தொடங்கியுள்ளது. அங்கு ராகுல் தினக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் பீடி சுற்றும் பெண்களை நேரில் சந்தித்தும், அவர்களது பிரச்னைகளையும் கேட்டறிந்தார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. 

மேற்கு வங்க மாவட்டங்களில் 523 கி.மீ தூரம் பயணித்த இந்த யாத்திரை, டார்ஜிலிங், ஜல்பைகுரி, அலிபுர்துவார் மற்றும்  தினாஜ்பூர் ஆகிய இடங்களைக் கடந்து மால்டா மற்றும் முர்ஷிதாபாத்தில் நடைப்பயணம் தொடர்ந்து வருகிறது. 

ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய யாத்திரை 67 நாள்களில் 6,713 கி.மீ தூரத்தைக் கடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாகச் சென்று மார்ச் 20ல் மும்பையில் நிறைவடைகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT