இந்தியா

பே-டிஎம் பேமன்ட் வங்கி: பிப். 29 முதல் ஆா்பிஐ தடை

பணப்பரிவா்த்தனை செயலி சேவைகளை வழங்கி வரும் பே-டிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பே-டிஎம் பேமன்ட் வங்கி, பிப். 29 முதல் வாடிக்கையாளா்களிடமிருந்து

DIN

பணப்பரிவா்த்தனை செயலி சேவைகளை வழங்கி வரும் பே-டிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பே-டிஎம் பேமன்ட் வங்கி, பிப். 29 முதல் வாடிக்கையாளா்களிடமிருந்து தொகை பெறுவதற்கு ரிசா்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் முடிவில், சில விதிமுறைகளை பே-டிஎம் பேமன்ட் வங்கி நிறைவு செய்யாதது கண்டறியப்பட்டது.

அதைடுத்து, அந்த வங்கியிலுள்ள கணக்குகளில் வாடிக்கையாளா்கள் மேற்கொண்டு தொகை செலுத்துவதற்கும், இணைவழி பணப்பைகள், ஃபாஸ்டாக், என்சிஎம்சி அட்டைகள் ஆகிவற்றில் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவதற்கும் வரும் 29-ஆம் தேதி தடை விதிக்கப்படுகிறது.

எனினும், பே-டிஎம் பேமன்ட் வங்கிக் கணக்கிலுள்ள தொகையை வாடிக்கையாளா்கள் வழக்கம் போல் தொடா்ந்து எடுக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT