சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் | PTI 
இந்தியா

ஞானவாபி விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பு குறித்து சமாஜ்வாதி தலைவர் கருத்து

பல வழக்குகளில், நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் தனது கருத்தாகக் குறிப்பிட்டுள்ளார்.

PTI

பல வழக்குகளில், நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் தனது கருத்தாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஞானவாபி வழக்கில், மசூதியின் நிலவறையில் ஹிந்துக்கள் பூஜை செய்ய அனுமதித்துப் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் உள்ள ஹிந்துக் கடவுள்களுக்கு பூஜை நடத்த கடந்த புதன்கிழமை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள நிலவறைக் கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால், 'நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரான கருத்துகள் எப்போது இருக்கத்தான் செய்யும்' எனக் கூறினார். மேலும் 'நீதிமன்றம் எப்போதும் சரியான தீர்ப்புகளை வழங்குகிறதா? எனக் கேள்வியெழுப்பினார். 'எல்லா நேரத்திலும் நீதிமன்றத்தின் முடிவு சரியான இருக்காது" எனவும் அவர் கூறியுள்ளார். 

'எதுவுமே இங்கு முற்றிலும் சரி என்றில்லை. எல்லா முடிவுகளுக்கும் ஆதரவானவர்களும் இருப்பார்கள், அதனை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.' எனக் கூறினார்.  

ஞானவாபி மசூதியில் இந்துக் கடவுள்களுக்கான பூஜைகள் நடத்திய மறுநாள், ஞானவாபி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தினை அணுகியது. ஆனால் உயர் நீதிமன்றம், மசூதி நிர்வாகத்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT