இந்தியா

‘புஷ்பா’ படப் பாணியில் காவலர்கள்- கடத்தல்காரர்கள் மோதல்: 50 பேர் மீது வழக்குப் பதிவு

தேக்கு மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இடையே மோதல் வெடித்தது.

DIN

வனத்துறை காவலர்கள் குழுவுக்கும் தேக்கு மரக் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மத்திய பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த மோதல் உருவானது. 50 பேர் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒன்பது இருசக்கர வாகனங்கள் சோதனைக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்டன. 

கொலுவா பத்தர் பகுதியில் சோதனையிட சென்ற வனத்துறை அதிகாரிகளைத்  தேக்கு மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த 50 பேர் தாக்கியதாகவும் மோதலுக்கு பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் விட்டு சென்ற 9 இருசக்கர வாகனங்கள் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 32 தேக்கு மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT