இந்தியா

ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் பல வருட கனவு நனவாகியுள்ளது: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்

DIN

ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் பல வருட கனவு நனவாகியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். 

ஹிமாசலப் பிரதேச மாநிலம்,  அண்டவுராவிலிருந்து அயோத்தி தாமுக்கு ஆஸ்தா சிறப்பு ரயிலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் இன்று அதிகாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, 500 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். 

இது ராம பக்தர்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நாட்டில் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வு அதிகரித்துள்ளது. ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் பல வருட கனவு நனவாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் கடைபிடித்தார்.  

ஹிமாசலப் பிரதேசத்தின் தேவபூமியில் இருந்து அயோத்தியின் தாமுக்கு முதல் ரயில் ராம பக்தர்களுடன் புறப்பட்டு சென்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT