இந்தியா

முதல் முறையாக 6 சதவிகிதம் உயர்ந்த எல்ஐசி பங்குகள்!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்கு விலை, இன்று முதல் முறையாக 6 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,000 ரூபாயை எட்டியது.

DIN

புதுதில்லி: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்கு விலை, இன்று முதல் முறையாக 6 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,000 ரூபாயை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலையானது 5.90 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,000.35 ரூபாயாக முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் 8.81 சதவிகிதம் அதிகரித்து, 52 வார உச்ச விலையான ரூ.1,027.95 ரூபாயை எட்டியது.

தேசிய பங்குச் சந்தையில் 5.64 சதவிகிதம் அதிகரித்து ரூ.998.85 உள்ள நிலையில் வர்த்தக நேர முடிவில் 8.73 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,028 ரூபாயாக உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.35,230.25 கோடி அதிகரித்து ரூ.6,32,721.15 கோடியாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இந்த நிறுவனத்தின் பங்கு 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த மாதம், எல்.ஐ.சி நிறுவனமானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை விஞ்சி சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனமாக மாறியது.

சந்தை மூலதனம் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.19,46,521.81 கோடி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ரூ.14,53,649.63 கோடி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி ரூ.10,97,634.10 கோடி, ஐசிஐசிஐ வங்கி ரூ.7,18,367.25 கோடி, இன்ஃபோசிஸ் ரூ.7,00,077.62 கோடி, எல்.ஐ.சி ரூ.6,32,721.15 கோடியுடன் நாட்டின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் மே 2022ல் பட்டியலிடப்பட்ட போது 22.13 கோடி பங்குகளை ஐபிஓ மூலம் அரசு விற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 96.5 சதவிகித பங்குகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT