இந்தியா

ஜாா்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

DIN

ஜாா்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருக்கிறது.

ஜாா்க்கண்ட் புதிய அரசு மீது இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் வகையில், அனைத்து எம்எல்ஏக்களும் நேற்று ஹைதராபாத்திலிருந்து ராஞ்சி திரும்பினர்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

நில மோசடியுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்தது.

அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி சாா்பில் சம்பயி சோரன் புதிய முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவரான சம்பயி, மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, 47 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

இதையடுத்து, ஜாா்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். மாநில சட்டப்பேரவையில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி போா்வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

ராமநாதபுரம் சந்தையில் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மாற்றுத்திறனாளி மாணவனின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT