இந்தியா

பாஜகவுக்கு நாயின்மீது என்ன பிரியம்? : ராகுல் காந்தி கேள்வி

வைரலான விடியோ குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்டில் பாரத் ஜோடா யாத்திரையின்போது நாய்க்கு பிஸ்கட் அளித்த விடியோ வைரலானது.

அந்த விடியோவில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு ராகுல் பிஸ்கட் கொடுப்பது போலான காட்சியைக் குறிப்பிட்டு பாஜக, ராகுல் காந்தி தனது கட்சிப் பணியாளர்களை இவ்வாறுதான் நடத்துகிறார் என விமர்சித்தது.

அதற்கு பதிலளிக்கும்விதமாக கும்லா மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியது:

 “செல்லப் பிராணி நடுங்கி கொண்டிருந்தது. நான் பிஸ்கட் கொடுத்தபோது அது பயப்பட்டிருக்க வேண்டும். அதனால் நாயின் உரிமையாளருக்கு பிஸ்கட் கொடுத்து கொடுக்கச் சொன்னேன். அதன் பிறகு நாய் பிஸ்கட்டைச் சாப்பிட்டது. இதில் என்ன பிரச்னை. பாஜகவுக்கு நாய்கள் மீது அப்படி என்ன பிரியம் எனத் தெரியவில்லை” எனப் பேசினார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, “நான் அஸாமியராகவும் இந்தியராகவும் பெருமைப்படுகிறேன். பிஸ்கட்டை சாப்பிட மறுத்து காங்கிரஸில் இருந்து நான் வெளியேறிவிட்டேன்” என ராகுல் காந்தியைத் தாக்கியுள்ளார்.

நாயின் உரிமையாளர் பிஸ்கட்டை ராகுல் காந்தி நாய்க்கு கொடுக்குமாறு சொல்லி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் காங்கிரஸ் பணியாளர் அல்ல என்பதையும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT