முகப்பு
இந்தியா

20 தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பெண் பலி! 

பஞ்சாப்பில் 20 நாய்கள் கடித்துக் குதறியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 4:34 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள பசான் காடிம் கிராமத்தில் 20 நாய்கள் கடித்துக் குதறியதில் 32 வயதான பெண் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

32 வயதான பரி தேவி, கடந்த செவ்வாய்க்கிழமை கால்நடைகளை மேய்க்க வயலுக்குச் சென்றுள்ளார். மாலை அவர் வீடுதிரும்பாததால் அவரது கணவர் அவரைத் தேடியுள்ளார். அப்போது நாய்கள் கடித்துக்குதறிய அவரது உடலை அவர் கணவர் கண்டுபிடித்துள்ளார் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

அந்தப் பகுதியில் உள்ள நாய்கள் மற்றொரு பெண்ணைத் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பொருளாதார உதவிகள் செய்யும் என துணை ஆணையர் அமித் குமார் பன்ச்சல் தெரிவித்துள்ளார். 

Advertisement

தெரு நாய்களை அப்புரப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.