ராகுலின் நடைப்பயணம் பிப்.19ல் அமேதியில் நுழைகிறது! 
இந்தியா

ராகுலின் நடைப்பயணம் பிப்.19ல் அமேதியில் நுழைகிறது!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் அமேதி நாடாளுமன்றத் தொகுதியை அடையும் என அக்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் அமேதி நாடாளுமன்றத் தொகுதியை அடையும் என அக்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

பிப்.19ல் பிரதாப்கர் மாவட்டத்தின் ராம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அத்தெஹாவிலிருந்து நடைப்பயணம் தொடங்கி கக்வாவில் நுழையும் என்று காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் அனில் சிங் தெரிவித்தார். 

அதன் பிறகு மகாராஜ்பூர், அமேதி, கௌரிகஞ்ச், காந்திநகர், ஜெய்ஸ் மற்றும் ஃபர்சத்கஞ்ச் வழியாக ரேபரேலிக்கு நடைப்பயணம் தொடரும் என்று அவர் கூறினார்.

அமேதியின் கௌரிகஞ்சில் உள்ள பாபுகஞ்ச் சாக்ரா ஆசிரமம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காந்தி உரையாற்ற உள்ளார். இது தவிர, பயணத்தின் போது பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். 

ஜனவரி 14ஆம் தேதி மெயின்பூரில் இருந்து தொடங்கிய பயணம், பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து 11 நாள்களில் 20 மாவட்டங்களுக்குச் செல்லும்.

ரேபரேலியில் நடைபெறும் யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை: சாலை மறியல்

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

சட்டமியற்றும் அமைப்புகளின் சுமுகமான செயல்பாடு அவசியம்: கிரண் ரிஜிஜு

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

தனியாா் தங்க நகைக்கடன் நிறுவனத்தினா் மோசடி செய்ததாக புகாா்

SCROLL FOR NEXT