இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் 6-ஆவது முறையாக மாற்றமில்லை: சக்திகாந்த தாஸ்

DIN

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்த மாற்றத்தையும் இந்திய ரிசாவ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து ஆறாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.5 சதவிகிதமாக தொடரும் எனவும், பணவீக்கம் இலக்கை நெருங்கி வருவதாகவும், எதிர்பார்த்ததை விட வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகவும் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வட்டியும் அதிகரிக்கப்படாது.

2024 இல் உலக பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும். உலகளாவிய வர்த்தக பலவீனமாக இருந்தாலும், அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது மற்றும் 2024 இல் அது வேகமாக வளர வாய்ப்புள்ளது.

தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது, இந்தாண்டு நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.

நடப்பு 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 வேகமாக சதவிகிதம் வளர்ச்சியடைந்து, வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருந்தது.

தற்போது உயர்ந்துள்ள பொதுக் கடன்கள், சில மேம்பட்ட பொருளாதாரங்கள் உள்ளிட்ட பல நாடுகளில் மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மை குறித்து கவலை எழுந்துள்ளது.

அதன்படி, உலகப் பொருளாதாரம், பல நாடுகளுக்கு பணவீக்கம் ஒரு கவலையாக உள்ளது, ஆனால் இந்தியா தனது பணவீக்கப் பாதையை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறது. இந்த ஆண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உலகளாவிய பொதுக் கடன் 100 சதவிகிதமாக இருக்கும். மேலும், புதிய முதலீடுகளுக்கான நிதி இடத்தை உருவாக்க கடன் சுமைக் குறைப்பது அவசியம் எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நிதிச் சந்தைகள், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகள் மற்றும் டிஜிட்டல் நாணயம் மற்றும் ஃபின்டெக் உள்ளிட்ட கட்டண முறைகளை உள்ளடக்கிய பல வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை முன்முயற்சிகள் குறித்த முக்கிய கொள்கை அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகை அணையிலிருந்து நீர்த் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT