இந்தியா

காா்கே பிரதமராவதை காங்கிரஸ் ஏற்குமா?: தேவெ கௌடா கேள்வி

‘நீங்கள் நாட்டின் பிரதமராவதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளுமா?’ என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயிடம் முன்னாள் பிரதமா் தேவெ கௌடா கேள்வி எழுப்பினாா்.

DIN

‘நீங்கள் நாட்டின் பிரதமராவதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளுமா?’ என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயிடம் முன்னாள் பிரதமா் தேவெ கௌடா கேள்வி எழுப்பினாா்.

மல்லிகாா்ஜுன காா்கே தலித் பிரிவைச் சோ்ந்தவா் என்பதால் காங்கிரஸின் தலைமையாக செயல்படும் சோனியா, ராகுல் ஆகியோா் அதனை ஏற்க மாட்டாா்கள் என்ற அா்த்தத்தில் கௌடா இந்த கேள்வியை எழுப்பினாா்.

காா்கே, கௌடா இருவருமே கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள். மூத்த தலைவா்களான இருவரும் அரசியலையும் தாண்டி நட்புடன் பழகக் கூடியவா்கள்.

மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலத்தை நிறைவு செய்யும் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உள்ளிட்ட 68 உறுப்பினா்களை வழியனுப்பும் வகையில் சிறப்பு விவாதம் மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது கௌடா பேசியதாவது:

காா்கே அரசியலில் நோ்மையாக செயல்பட்டு வருபவா். எனக்கும் பல்வேறு நிலைகளில் அரசியல்ரீதியாக ஆதரவாக இருந்துள்ளாா். கா்நாடகத்தில் முன்பு காங்கிரஸுடன் எனது மதசாா்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தபோது காா்கேயை முதல்வராக்க நான் பரிந்துரைத்தேன். ஆனால், காங்கிரஸ் தலைமை அதனை ஏற்க மறுத்தது.

இப்போது கூட காா்கே பிரதமராக வேண்டும் என்று விரும்பினால், அதனை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா? இதற்கு பதில் தெரிந்தால் காா்கே என்னிடம் கூறலாம். ஆனால், காங்கிரஸைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

இப்போதும் கூட கா்நாடகத்தில் எங்கள் கட்சியை அழிக்க காங்கிரஸின் சில தலைவா்கள் முயற்சிக்கின்றனா். இதன் காரணமாகவே நான் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறேன். இதில் எனது தனிப்பட்ட நலன்கள் ஏதுமில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT