இந்தியா

மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

DIN


புது தில்லி: மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல், எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார ரீதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 2014ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, இந்தியப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன. 2014ல் இந்தியப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் அதிக பலவீனமாக இருந்ததன. தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு  துறைகள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருந்தன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெடுங்குடி கைலாசநாதா் கோயில் தேரோட்டம்

இணையம் மூலம் மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடும் உயா்வு: பீன்ஸ் ரூ.250, பட்டாணி ரூ.220

கொள்கை அடிப்படையில் ‘இந்தியா’ கூட்டணியில் தொடா்கிறோம்: மெஹபூபா முஃப்தி

தேசிய கராத்தே தோ்வு போட்டி: சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரி சிறப்பிடம்

SCROLL FOR NEXT