இந்தியா

நெல்லூர் அருகே 2 லாரிகள்,பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் பலி

ஆந்திரம் மாநிலம் நெல்லூர் மாவட்டம் முசுனூர் அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் பலியாகினர்,20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

DIN

முசுனூரு (ஆந்திரம்): ஆந்திரம் மாநிலம், நெல்லூர் மாவட்டம் முசுனூர் அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் பலியாகினர்,20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆந்திரம் மாநிலம், நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி நோக்கி எருதுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், பின்னால் இரும்பு ஏற்றிச் சென்ற மற்றுமொரு லாரியும் சென்று கொண்டிருந்தது. 

இந்த நிலையில், இரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த தனியார் சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 2 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் இறந்தனர். மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

SCROLL FOR NEXT