இந்தியா

ராகுலின் நடைப்பயணத்தில் பிரியங்கா பங்கேற்பு!

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.

DIN

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை இணைந்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் கடந்த மாதம் மணிப்பூரில் தொடங்கியது. மேகாலயா, அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் சகோதரி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கடந்த பிப்.16-ம் தேதி நடைப்பயணத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய உடல்நலம் பாதித்த நிலையில், அவரால் பங்கேற்க இயலவில்லை.

இந்த யாத்திரை தற்போது உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.

மொராதாபாத்தில் இருந்து, அம்ரோஹா, சம்பல், புலந்த்ஷாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக ஃபதேபூர் சிக்ரி வழியாக ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி பயணம் செய்வார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT