கோப்புப் படம்
கோப்புப் படம் 
இந்தியா

மக்களவைத் தேர்தல்: 4 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது சிபிஐ!

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி கேரளத்தில் போட்டியிடும் 4 தொகுதி வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

கேரளத்தில் திருவனந்தபுரம், வயநாடு, திரிச்சூர், மாவேலிக்கரை ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக சிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடவுள்ளார். திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளராக ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். திரிச்சூரில் வி.எஸ். சுனில் குமாரும், மாவேலிக்கரையில் அருண்குமாரும் போட்டியிடுகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆனி ராஜா, இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் போட்டி நிலவுகிறது. இதில் புதிதாக எதுவும் இல்லை. சூழல் மற்றும் போட்டிகள் முன்பு இருந்ததைப் போலவே உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உள்ளது. இதனால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வயநாட்டில் ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT