கோப்புப்படம் 
இந்தியா

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 பயங்கரவாதிகள்:தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மாவட்டத்தைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

DIN

ஜம்மு: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து செயல்பட்டு வரும் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மாவட்டத்தைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து கிஷ்துவாா் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளா் கலீல் போஸ்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டு வரும் கிஷ்துவாா் மாவட்டத்தைச் சோ்ந்த 23 பயங்கரவாதிகளை, தேடப்படும் குற்றவாளிகளாக தோடாவில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

கிஷ்துவாா் மாவட்டத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இதனை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி இம்மாவட்டத்தைச் சோ்ந்த 13 பயங்கரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து கிஷ்துவாா் மாவட்டத்தில் தற்போது தேடப்படும் குற்றவாளிகளின் மொத்த எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது. அவா்களுக்கு எதிராக 2 முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை சேகரித்து நீதிமன்றத்துக்கு வழங்கியதில் மாவட்ட போலீஸாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றம் முன் ஆஜராக வேண்டும்.

இல்லையெனில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி பிரிவு 82-இன்கீழ் அவா்களின் சொத்துக்களும் இணைக்கப்படும். ஏற்கெனவே 12 பயங்கரவாதிகளின் சொத்துக்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை விரைவில் நீதிமன்றத்துக் கொண்டுவர சட்ட அமைப்புகளுடன் காவல் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

SCROLL FOR NEXT