புதிய தண்டனை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர் சங்கத்துடன் நடத்த மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
அகில இந்திய மோட்டார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தண்டனை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றனர். ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா எனவும் மத்திய அரசு பெயர் மாற்றம் செய்து மசோதாக்களை தாக்கல் செய்தது.
மேலும், அதில் சில திருத்தங்களையும் செய்துள்ளது. அதன்படி ஹிட் & ரன் எனும் விபத்து ஏற்படுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிக்க முயன்றால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. இதற்கு முன்பு ஹிட் & ரன் வழக்குக்கு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனையாக இருந்தது.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொண்டுசெல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களின் பல இடங்களில் இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.