கோப்புப்படம் 
இந்தியா

அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வமான சம்மனுக்கு கேஜரிவால் ஒத்துழைப்பார்: ஆத் ஆத்மி!

தில்லி கலால் கொள்ளை வழக்கில் முதல்வர் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை சட்டப்பூர்வமான சம்மன் அனுப்பினால் அதற்கு அவர் ஒத்துழைப்பார் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியுள்ளனர். 

DIN

தில்லி கலால் கொள்ளை வழக்கில் முதல்வர் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை சட்டப்பூர்வமான சம்மன் அனுப்பினால் அதற்கு அவர் ஒத்துழைப்பார் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியுள்ளனர். 

கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்திருந்த நிலையில், 3வது முறையாக சம்மன் அனுப்பியது. 

தொடர்ந்து, மூன்றாவது முறையாக நேற்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை. 

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஜஸ்மின் ஷா கூறுகையில், 

மதுபான ஊழல் தொடர்பான கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் அமலாக்கத்துறையால் சேகரிக்க முடியவில்லை. 

மதுபான ஊழல் விசாரணை என்று கூறப்படுவது போலியானது. இந்த வழக்கின் விசாரணை  தொடர்பாக அமலாக்கத்துறை 500-க்கும் மேற்பட்ட சாட்சிகளை அழைத்தும், 1,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியது, ஆனால் இதுவரை ஆதாரமாக 1 ரூபாய் கூட மீட்கப்படவில்லை. 

இந்தியப் பேரவையின் உயர்மட்டத் தலைவர்களைக் குறிவைத்து, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கேஜரிவாலைக் கைது செய்து, அவர்களை பிரசாரத்தில் ஈடுபடவிடாமல் தடுக்கும் சதி இது என்று அவர் கூறினார். 

அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன் சட்டப்பூர்வமானது என்றால் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜரிவாலும் தயாராக உள்ளனர் 

மதுபான ஊழல் வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கைது செய்யப்பட்ட முந்தைய இரண்டு சம்பவங்களிலும் இதேபோன்ற முறை காணப்பட்டது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுகாதார ஆய்வாளா் தோ்வு முறைகேடு: விசாரணை முடியும் வரை பணி நியமனம் இல்லை!

ஐபி பல்கலைக்கழகத்தில் 24 புதிய படிப்புகள் அறிமுகம்; பிப்.2 முதல் இணையதள விண்ணப்பங்கள் தொடக்கம்

கொடைக்கானலில் அறிவிக்கப்பட்டதைவிட அதிக நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி!

ஆத்தூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சா் இ. பெரியசாமி

கண்ணமங்கலத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

SCROLL FOR NEXT