இந்தியா

தில்லி: ஆரஞ்சு நிற எச்சரிக்கை

DIN

புதுதில்லி: இந்திய வானிலை மையத்தின் தகவல்படி தில்லியில் சில பகுதிகள் மிக அடர்த்தியான பனியையும் சில பகுதிகள் அடர்த்தியான பனியையும் எதிர்கொண்டன.

குறைந்தபட்ச வெப்பநிலையாக 9.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மத்திய தரத்தில் பனியும் குளிரும் நாளின் பகல் வேளையில் இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் தில்லியின் வெளிப்புற பகுதிகளில் மூடுபனி நிலவியது. தில்லியின் சில பகுதிகளில் மூடுபனி காணப்பட்டது.

தில்லியில் நிலவும் குளிர் | PTI

காலை 8.30 மணிக்கு வழக்கத்தை விட குறைவான வெப்பநிலை 9.4 டிகிரி செல்சியஸ் சஃபார்ட்ஜங் மையத்தில் பதிவானது.

ரிட்ஜ் மையம், 9.1 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்துள்ளது.

சில இடங்களில் மிதமான பனி மற்றும் குளிர் நிலவும் என்பதால் தலைநகருக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூடுபனியால் குறைந்தது 22 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

தில்லி காற்றின் தரம் 352 புள்ளிகளில் நிலைபெற்றது. மிக மோசம் பிரிவில் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT