இந்தியா

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

PTI

பில்கிஸ் பானு வழக்கில், தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரும், முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

முன்விடுதலையை ரத்து செய்ததோடு, 11 குற்றவாளிகளும் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு முன்கூட்டியே விடுதலை அளித்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.

மாநிலத்தில் நடந்த கலவரங்கள் மற்றும் அது தொடர்பான உத்தரவுகள் "ஒரே மாதிரியானவை" என்று கூறி, உத்தரவு தொடர்பாக சிந்தனை செய்யாமல் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளிகள் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

முன்கூட்டியே விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த அமர்வு, முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான உத்தரவை நிறைவேற்ற குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படும் மாநிலத்துக்குத்தான், குற்றவாளிகளின் மன்னிப்பு மனுவைத் தீர்ப்பதற்கும் அதிகாரம் உடையது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

எனவே, இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிரத்தில் நடந்ததால், முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மகாராஷ்டிரத்துக்கே உரியது. "நாங்கள் மற்ற விவகாரங்களுக்குச்  செல்ல வேண்டியதில்லை. ஆனால் முடிவெடுப்பது, எங்களிடம் உள்ளது. குஜராத் அரசு தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை அபகரித்து அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் சட்டத்தின் ஆட்சி மீறப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அந்த அடிப்படையில், முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுவதற்கு தகுதியானவை என்று 100 பக்கங்களுக்கு மேல் உள்ள தீர்ப்பை அமர்வு வெளியிட்டது.

குற்றவாளிகளின் மன்னிப்புக் கோரும் மனுவை பரிசீலிக்குமாறு குஜராத் அரசைக் கேட்டுக் கொண்ட மற்றொரு அமர்பு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை 'செல்லாதது' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது ஒரு முக்கியமான வழக்கு, இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக முன்கூட்டியே விடுதலை செய்ததன் மூலம் சட்டத்தின் அதிகாரம் மீறப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

சாத்தூா் பகுதியில் பலத்த மழை

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

சா்வதேச யோகா போட்டியில்  தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி

SCROLL FOR NEXT