இந்தியா

உயர் தொழில்நுட்ப வகுப்பறைகளுடன் 7 பள்ளிகளின் தரம் உயர்வு: கேரள அரசு

DIN

திருவனந்தபுரம்: கழக்கூட்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 7 அரசுப் பள்ளிகள் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு, தற்போது சர்வதேசத் தரத்துடன் உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் வி. சிவன்குட்டி இன்று தெரிவித்தாா்.

தொகுதி முழுவதும் பல்வேறு பள்ளிகளில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 92 உயர் தொழில்நுட்ப வகுப்பறைகளையும் அமைச்சர் திறந்து வைத்தார். அதே வேளையில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார் சிவன்குட்டி.

ஹைடெக் வகுப்பறைகளில் 75 அங்குல எல்இடி மானிட்டர், ஓபிஎஸ் கணினி, யுபிஎஸ், குளிரூட்டப்பட்ட சூழல், ஹெட்ஃபோன்களுடன் கூடிய மைக்ரோஃபோன், நிர்வாக இருக்கைகள், மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போன்ற வசதிகள் வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மசினகுடியில் ரேஷன் கடையின் ஷட்டரை மீண்டும் உடைத்த காட்டு யானை

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

அதிக மகசூலுக்கு கோடைஉழவு மேற்கொள்ள அறிவுறுத்தல்

குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலா பழங்களை ருசிக்கும் யானை

SCROLL FOR NEXT