கோப்புப் படம் 
இந்தியா

தில்லியில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை

தில்லியில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிகளும் நாளை(ஜன.15) திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

DIN

தில்லியில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிகளும் நாளை(ஜன.15) திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் தில்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தில்லியில் கடும் குளிரை கருத்தில்கொண்டு மழலையர் பள்ளிகள் முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த விடுமுறை முடிந்த நிலையில் தில்லியில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிகளும் நாளை(ஜன.15) திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் காலை 9 மணிக்கு முன் பள்ளிகளை திறக்கவோ, 5 மணிக்கு மேல் பள்ளிகளை இயக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3 ஆகக் குறைந்ததால் கடுமையான குளிர் தொடர்ந்து நீடித்தது. இதனிடையே ஜனவரி 20-ம் தேதி வரை நகரத்தில் அடர்ந்த மூடுபனி காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

விதிமீறல் கட்டடம்: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட மாநகராட்சி ஆணையர்!

தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

SCROLL FOR NEXT